கேள்வி பதில்
ஞாயிறு, 6 டிசம்பர், 2020
corporate Vs illuminati | இல்லுமினாட்டிகளை வெல்லும் வேல்| SFIT | Tamil
சனி, 2 மே, 2020
சனி, 24 செப்டம்பர், 2016
கேள்வி -
மொத்தம் ஒன்பது
முறை நவக்கிரகங்களைச் சுற்ற வேண்டும்.
ஏழு சுற்றுகள்
வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன்,
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை.
எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக
சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்.
கேள்வி : இராகுகாலம். எமகண்டம் நேரங்களில் விசேட நிகழ்ச்சிகளைத் தொடங்கக் கூடாது என்கிறார்களே? அதைப்பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
பூமியானது ஒவ்வொரு நாளும் தன்னைத்தானே சுற்றி வருகிறது என்பது
அனைவருக்கும் தெரியும், அவ்வாறு சுற்றிவரும் போது ஒவ்வொரு
நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வடதிசையை நோக்கிச் தாழ்கிறது அவ்வாறு சுழலலும்
போது மனிதனின் எண்ண அலைகள் அத்திசையை நோக்கி ஈர்க்கப்படும், அந்த
நேரத்தில் மனித எண்ணம் சற்று மந்தமாகச் செயல்படும், சுறுசுறுப்பு
சற்று குறைவாகவே இருக்கும், அந்தக் குறிப்பிட்ட காலங்கள்
தான் இராகுகாலம். எமகண்டம் என அழைக்கப்படுகின்றன, ஆகவே அந்த
நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் நாம் சுப விசேட நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம்
கேள்வி : நாம் நெற்றியில் விபூதி. குங்குமம். சந்தனம் போன்றவற்றை இட்டுக் கொள்வது எதற்காக?
பொதுவாக மனிதனுடைய என்ண அலைகள்
வலிமை வாய்ந்தவை, மற்றவர்கள் எண்ணம்
(நல்லதாகவும். கெட்டதாவும்) நிச்சயம் நம்மைத் தாக்கும், அவ்வாறு
தாக்கும்போது முதலில் அது நம்முடைய புருவ மத்தியின் வழியே சென்று நரம்பு
மண்டலத்தைப் பாதிக்கிறது, அதைத் தவிர்க்கவும். வலுவான
எண்ணங்களுக்காகவும் நாம் விபூதி. குங்குமம். சந்தனத்தை அவரவர் சம்பிரதாயப்படி
இட்டுக்கொள்ளுதல் அவசியம், இதனால் முகம் பொலிவுபெறுகிறது
கேள்வி : ஆலயங்களில் உயிர்பலியிடுதலை இந்தக் கால கட்டத்திலும் நிறையப்பேர் செய்கிறார்களே. இது எதனால்?
சாக்த மதத்தில் தாந்திரீக
வழிபாடுகளில் மந்திரம். யந்திரம். தந்திரம் ஆகியவற்றைப் பிரதிஷடை செய்யும் போது
உயிர் பலியிட வேண்டும் என்றும் காலமுக மதப் பிரிவில் பைரவர்
வழிபாட்டில் உயிர்பலியிடுவதைப் பற்றியும் பல குறிப்புகள் உள்ளன, வேதகாலத்தில் செய்யப்பட்ட பெருவாரியான யாகங்களில் பசு. குதிரை. ஆடு.
மனிதன் போன்றவற்றைப் பலியிடப் பட்டதற்கான ஆதாரம் உள்ளது, வேதங்களில்
குதிரை. மாமிசப் படையலைப் பற்றியும். மதுபானப் படையலைப் பற்றியும் பல குறிப்புகள்
உள்ள்ன, எனவே உயிர் பலியிடுதல் என்பது பழைமையான விஷயம்.
இக்காலத்தில் வைதிகச்சடங்குகளில் உயிர்ப்பலி இடுவது முற்றிலும்
குறைந்து விட்டது அது பாவம் என்ற ஜீவகாரூண்ய எண்ணமும் வளர்ந்து விட்டது
அதற்கு மாற்றாக பூசனிக்காய். எலுமிச்சை. அவல் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
கேள்வி : இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும். ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கோவிலில் தீயவர்கள் நுழைந்தால் கூட
நாம் கோவிலில் நுழைந்துவிட்டோம் என்று நினைத்து “இறைவா” என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை
புரிவார்கள், நல்லவர்கள் நுழைந்தால் உலக அமைதி. நன்மைக்காக
பிரார்த்திப்பார்கள். அதே சமயம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள்
வீட்டிலிருந்தே வழிபடலாம், வீட்டில் பல பிரச்சினைகளால் மனம்
அலைகழிக்கப்படும், சிந்தனை இறைவன்பால் இருக்காது என்பது சர்வ
நிச்சயம், ஆகவே நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்று
அங்கமர்ந்து பக்தர்களின் துயரைப் போக்கும்.
கேள்வி : பூஜை அறையில் சுவாமி படங்களுடன் இறந்த மூதாதையர் படங்களை வைக்கலாமா?
வைக்கக்கூடாது,
தாய். தந்தை மீது அதிகமான. பாசமும். பற்றும் கொண்டவர்கள் இதைப்போன்ற
முறைகளைச் செய்கிறார்கள், அவர்களுக்கு இது திருப்தி சந்தோஷம்
தந்தாலும் சாஸ்திரப்படி இறைவிக்ரகங்களுக்குச் சமமாக வேறெந்த விக்ரகத்தையும்
படத்தையும் வைக்கக் கூடாது,
இறைவனுக்குக் காட்டப்படும் தீப
ஆராதனைகளும் அந்தப் படத்திற்குக் காட்டக் கூடாது, அந்தப் படங்களுக்கு தனியாக வேண்டுமானால் காட்டலாம்,
தங்க நகை அணிவது அவசியமா?
ஆபரண மாலை என்று ஒரு நூலில்
சொல்லியிருக்கு. அதில் உடலில் எந்தெந்த பாகங்களில் என்னென்ன ஆபரணங்கள் அணிய வேண்டும்
என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
காதுக்கு மட்டுமே 6 வகையான ஆபரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. மேல் காது, கீழ் காது, இடைக்காது இதிலெல்லாம் என்னென்ன அணிய
வேண்டும் என்று கூட சொல்லப்பட்டிருக்கிறது. காதில் அணியக் கூடியதெல்லாம்
அக்குபஞ்சர் முறையில் உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றெல்லாம்
உண்டு.
ஆண்களுக்கும் மெட்டி அணிதல் உண்டு.
வலது காலினுடைய பெரு விரலிற்கு அருகில் உள்ள இரண்டாம் விரலிலும்,
3வது விரலிலும் திருமணம் முடிந்த ஆண்கள் மெட்டி அணிய வேண்டும்.
அணிகலன்கள் மூலமாக உடலினுடைய இரத்த
ஓட்டங்கள்,
எண்ண ஓட்டங்கள் இதெல்லாம் நெறிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில்
பார்க்கும்போது ஆபரணங்களை தங்கத்தில் அணியும் போது மேலும் ஒரு புனிதத் தன்மை
கிடைக்கிறது.
தங்கம் சாஸ்திரத்தில் லட்சுமியோட
உலோகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கால்களிலெல்லாம் தங்கம் அணியக்கூடாது.
மெட்டியெல்லாம் வெள்ளியில்தான் செய்ய வேண்டும், கொலுசும்
வெள்ளியில்தான் அணிய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் லட்சுமியின்
அடையாளமாகச் சொல்லப்பட்டிருப்பதால் இடைப்பகுதிக்கு கீழ் தங்கத்தை கொண்டு போகக்
கூடாது. இடைப்பகுதி வரைக்கும் தங்க ஆபரணங்கள் அணியலாம்.
தங்கத்திற்கு மனோபலத்தை தரக்கூடிய
சக்தியும் உண்டு. தங்கம் தன்னம்பிக்கை தரக்கூடிய உலோகம். அதனால்தான் ஒரு சின்ன
மோதிரமாவது விரலில் இருந்தால் நல்லது என்று சொல்வார்கள். அதனால்தான் நம்முடைய
முன்னோர்கள் தங்கத்தில் தாலியைச் செய்தார்கள். மற்ற உலோகங்களில் தாலி செய்யும்
பழக்கம் இல்லை.
வெள்ளி வந்து எதையும் எளிதாக
எடுத்துக்கொள்ளக் கூடிய உணர்வைத் தரக்கூடியது.
காப்பர் எடுத்துக் கொண்டீர்கள்
என்றால் ஒரு பிடிவாதத்தைத் தரக்கூடிய உலோகம். இது ஆண்களுக்கும் பொருந்தும்..
நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தவருக்கு செய்ய வேண்டியதென்ன?
கேள்வி:
ஒரு குடும்பத்தின் தாய் அல்லது தந்தை நீண்ட காலம் வாழ்ந்து மறைந்த நிலையில்,
அடுத்த ஓராண்டிற்கு அவ்வாறு மறைந்தவருக்கு செய்ய வேண்டியது என்ன?
மறைந்த அந்த பெரியவர்கள்,
வாழும் போது என்ன செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்களோ அதனை
உடனடியாக செய்திடல் வேண்டும்.அவர்கள் நீண்ட காலமாக செய்ய நினைத்தது செய்யப்படாமல்
ஏதேனும் இருந்தால், அவர்கள் மறைந்த ஒரு மாத காலத்திற்குப்
பிறகு அதனை நிறைவேற்றிட வேண்டும்.
குடும்ப உறுப்பினருக்குத் திருமணம்,
குல தெய்வத்திற்கு படையலிட்டு கும்பிடுதல், குறிப்பிட்ட
கோயிலிற்குச் சென்று பரிகார பூசைகள் ஏதேனும் இருப்பின் செய்தல், மறைந்தவர்கள் நேர்ந்துகொண்ட பிரார்தனைகளை நிறைவேற்றுதல் போன்றவற்றை
அவர்கள் மறைந்த ஒரு மாத காலத்திற்குப் பிறகு செய்து முடிக்கலாம்.
எதைச் செய்தாலும் உற்றார் உறவினர்
அனைவரும் கலந்துகொள்ள செய்து முடிக்க வேண்டும், இது
மிக முக்கியமானது. குடும்பமாக தனித்து செய்திடல் கூடாது.
கேள்வி: குல தெய்வத்திற்கு படையலிட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்திருப்பின் அதனை இந்த ஓராண்டிற்குள் நிறைவேற்றலாமா? ஓராண்டுக் காலம் துக்கத்திற்குப் பிறகுதான் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே?
நீண்ட காலம் வாழ்ந்து
மறைந்தவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். அவர்களின் ஆத்மா வாழ்த்திக்
கொண்டிருக்கும். எனவே, ஒரு மாத கால
துக்கம் போதுமானது.
நான் ஏற்கனவே கூறியபடி,
குடும்பத்தினர் மட்டும் தனித்து குல தெய்வ வழிபாடு செய்யக் கூடாது,
உற்றார் உறவினர் புடை சூழ அதனை நிறைவேற்றிடல் வேண்டும்.
கேள்வி : ஆன்மீக வாழ்வில் (நிலையயில்) உயர்வடைய சிவனை வழிபடலாமா? விஷ்ணுவை வழிபடலாமா?
சிவனும். விஷ்ணுவும் தனித்தனியாகக்
கூறப்பட்டிருந்தாலும் இறைவன் ஒருவன் தானே என்ற எண்ண ஓட்டத்தில் நீங்கள்
இக்கேள்வியைக் கேட்டிருந்தால் அதை முற்றிலும் மாற்றிக் கொள்ளுங்கள்,
ஹரியும் சிவனும் ஒன்றுதான், இதில் எனக்கு எந்த
மாறுபட்ட கருத்தும் இல்லை, ஆனால் ஹரியகா இருக்கும்போது ஒரு
செயலலையும். சிவனாக இருக்கும்போது ஒரு செயலையும் செய்கின்றான், இது எப்படி என்றால் ஒருவன் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும்போது ஒரு
மாதிரியாகவும் மகன் ஸ்தானத்தில் இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் நடந்து
கொள்கிறான் அல்லவா? நீங்கள் கேட்டிருப்பது ஆன்மீக வாழ்வில்
முன்னேற யாரை வழிபடுவது என்பது தானே? எம்பெருமான் நாராயணனை
வழிபடும் போது இவ்வுலக வாழ்க்கையில் துன்பங்களைக் களைகிறான், பரமேஸ்வரனை வழிபட்டாலோ பரவுலகத்திலும் ஏற்படும் துன்பத்தைக் களைகிறான்,
என்னைப் பொருத்தவரையில் தியானம். யோகம் ஆகியவற்றுக்கெல்லாம் சிவனே
மூர்த்தி என்று கருதுகிறேன், வைணவ. சைவ பேதங்கள் எல்லாம்
பக்குவமில்லாத மனிதர்களுக்குத்தான், ஏனென்றால் “இராமன் சிவபூஜை செய்கிறார்; சிவன் இராம நாமம்
ஜெபிக்கிறார்”
கேள்வி அமாவாசை திதியில் பிறந்த குழந்தை திருடனாகும் என்பது உண்மையா?
ஜோதிடத் துறையில் அமாவாசை
தினத்தைப் பற்றி பல சர்ச்சைகள் இருந்து
வருகிறது. அமாவாசை நாளை சுபநாள் என்று ஒரு
சாராரும் அசுப நாள் என்று மற்றொரு சாராரும் சொல்லி வருகிறார்கள்.
அசுப நாள் என்று சொல்பவர்கள் அன்றைய
தினம் சந்திரன் முழுமையாக பூமியால் மறைக்கப்பட்டு விடுகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள ஆகர்ஷண தொடர்பு
அமாவாசை நேரத்தில் இருப்பது இல்லை. எனவே அமாவாசை அசுப தினமே என்று வாதிடுகிறார்கள்.
சந்திரனுடைய சக்தி சரியாக
இல்லாதபோது பிறக்கும் குழந்தைகள் தாயாரிடம் இருந்து போதிய அரவணைப்பைப் பெற
முடியாது அல்லது குழந்தை தாயிடம் அவ்வளவாக ஒட்டாது என்பது சாஸ்திர விதி மட்டுமல்ல
அனுபவ உண்மையுமாகும்.
தாயின் அன்பைப் பெறாத அல்லது தாய்
மீது அன்பு வைக்காத குழந்தைகளைச் சிறந்தவர்கள் என்று கூறுவது மிகவும்
சிரமமாகும். இத்தகைய குழந்தைகளிடம் நல்லவை
அல்லாத இயல்பு சற்று அதிகமாக இருக்கும்.
கேள்வி : திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?
திருமணமானவர்கள் என்று
உலகத்தார்க்குத் தெரிவிப்பதற்கு மட்டுமன்றி கால் கட்டை விரலுக்கு அடுத்ததாக உள்ள
விரலில் உள்ள நரம்பு மூளையோடு இணைந்து பாலுணர்வைத் தூண்டுகிறது என்பதற்காகவும்
அணியப்படுகிறது, அந்த நரம்பு வெள்ளி உலோகத்தால்
தூண்டப்படுமத் போது கணவன் - மனைவி இடையேயான தாம்பத்ய உறவை நெறிப்படுத்தி அவர்களைத்
திருப்தியுறச் செய்கிறது.
கேள்வி : திருமண வைபத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன?
முன்பின் அறிமுகமில்லாத இரண்டு
ஜீவன்கள் இணைவதுதான் உண்மையான திருமணம், இத்திருமணத்தை
(1) இறைவன் சாட்சியாகவும்
(2) பெரியவர்கள் சாட்சியாகவும்
(3) தன்னுடைய மனசாட்சியைக் கொண்டும் ஓர் ஆண் மகன் தாலியைக் கட்டுகிறான்,
இந்த மூன்று சாட்சிகளை மூன்று முடிச்சுகளாக உருவகப்படுத்துவதே தாலி
கட்டுவதன் அர்த்தமாகும்.
காலசர்ப தோஷம் தீராத துயரமா...?
அனைத்து கிரகங்களும் ராகு
கேதுகளுக்கு நடுவில் அகப்பட்டு கொண்டால்
கால சர்ப தோஷ ஜாதகம்
பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஜனன
லக்கினம் ஜனன ராசி உட்பட அனைத்து கிரகங்களும் ராகு கேதுகளுக்கு நடுவில் அகப்பட்டு
கொண்டால் அந்த ஜாதகத்தை கால சர்ப தோஷ ஜாதகம் என்கிறார்கள் இந்த அமைப்பில் மற்ற
கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றியிருந்தாலும் கூட அவைகள் நன்மையை தராது மேலும் அந்த
கிரகங்களின் உடுமஹா தசை தசா புத்தி நடக்கும் காலம் கூட கேடுடையதாகவே அமையும் என்று
பரவலாக நம்பப் படுகிறது
ஆனால் இந்த நம்பிக்கை ஜோதிட ஆய்வு
படியும் அனுபவப் படியும் முழுமையான உண்மை இல்லை என்பதே எனது கருத்தாகும். ஜோதிட
நூல்கள் ஒருவனின் ஜாதகத்தில் கால சர்ப தோஷம் அமைந்திருந்தால் அவன் முப்பத்திரண்டு
வயது வரையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்திப்பான் அதன் பிறகு
அந்த தோஷம் தானாக நிவர்தியாகி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்று சொல்கின்றன
எந்த விசயமாக இருந்தாலும் அது
புத்தகங்களில் எழுதப்பட்டு இருப்பதனால் மட்டும் உணமையாகி விடாது அந்த கருத்துக்கள்
நமது வாழ்விலோ அல்லது நம்மை சார்ந்தவர்கள் வாழ்விலோ எந்த அளவு சரியாக நடந்துள்ளது
என்பதை அனுபவத்தில் ஆராய வேண்டும்
கால சர்ப தோஷமுடைய நிறைய ஜாதகங்களை
நான் ஆராய்ந்து இருக்கிறேன் அவர்கள் வாழ்க்கையையும் பல வருடமாக கவனித்தும்
வருகிறேன் பழமையான நூல்கள் சொல்லுகிறப்படி சில காலங்கள் அவர்கள் கஷ்டத்தை
அனுபவிப்பது என்னவோ உண்மை தான் ஆனால் மீதமுள்ள காலத்தில் பல வெற்றிகளையும்
சந்தோசங்களையும் அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்
இங்கிலாந்து மகாராணி மனதிலும் சோகம்
உண்டு தெருவோரத்தில் வாழ்பவனும் ஆனந்தம் அடைவதுண்டு எனவே தேவை இல்லாமல் கால சர்ப
தோஷத்தை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை அதற்காக வாழ்வை இழக்க வேண்டிய
தேவையும் இல்லை
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
அண்ட வெளியில் உள்ள கிரகங்கள்
ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது
கட்டுப்படுத்துகிறது. உதாரணமாகச் சொல்வது என்றால்
வியாழன்
என்ற குரு கிரகம் நமது மூளையைக் கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன்
மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும்
காரணமாக இருக்கிறது.
சனி
நரம்பு மண்டலத்தையும்,
புதன்
சுவாசத்தையும் கட்டுப் படுத்துகிறது. அதே போன்று
செவ்வாய்
கிரகம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும் ஆட்சி
செய்கிறது.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம்
இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக
இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும்
நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம்,
சரியாக இராது.
இதுதான் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பே தவிர மற்றபடி மணமக்கள் பிரிந்து
விடுவார்கள், இறந்து விடுவார்கள் என்பதெல்லாம் தவறான
நம்பிக்கைகளாகும். கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டும்
செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்குத் தோஷம் இல்லாமல் இருந்தும் கூட அவர்கள் பல
காலம் நல்லவிதத்தில் இணைபிரியாமல் குடும்பம் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்.
பொதுவாக லக்னத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது தோஷம் என்று கருதப்படுகிறது.
ஆனால் இது பொதுவான கணக்கே தவிர சரியான கணக்கு அல்ல. செவ்வாய் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று இருந்தாலும் மகர ராசியில் உச்சம்
பெற்று இருந்தாலும் கடக ராசியில் நீச்சம் பெற்று இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்ற
பேச்சுக்கே இடமில்லை.
இது தவிர குரு, சனி, ராகு,
கேது ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்று செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து
இருந்தாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ அல்லது மேற்குறிப்பிட்ட
கிரகங்கள் செவ்வாயைப் பார்த்தலோ செவ்வாய் தோஷம் கண்டிப்பாகக் கிடையாது. அதே நேரம்
செவ்வாயின் நட்புக் திரகங்களான சூரியன், சந்திரன், குரு ஆகியவற்றின் ராசிகளான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்குச்
செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் என்பதே கிடையாது. இந்தக் கணக்குகளின்
அடிப்படையில் பார்க்கும் போது ஆயிரத்தில் ஒருவருக்குத் செவ்வாய் தோஷம் உண்டு.
மற்றவர்கள் அதை நினைத்துப் பயப்படுவது வீண் கற்பனையாகும்..
அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா? - கத்தரி தோஷ காலம்
அக்னி நட்சத்திரம் பிறந்து விட்டால்
சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் காலம் காலமாக
இருந்து வருகிறது. குறிப்பாகச் சொல்லுவ தென்றால் தென் தமிழகத்தை விட வட
தமிழகத்தில் இத்தகைய நம்பிக்கை மிக அதிகாமவே இருக்கிறது.
எந்தவொரு சுபநிகழ்ச்சிக்கும் நேரம்
குறிப்பது வழக்கம். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு லக்னம் ஆட்சியில் இருக்கும்.
அந்த லக்னத்திற்கு 2வது இடத்திலேயும்,
12வது இடத்திலேயும் ராகு, கேது, சனி, செவ்வாய், போன்ற பாவ
கிரகங்கள் அமர்ந் திருந்தால் அது தான் கத்தரி தோஷ காலம் எனப்படும்.
இந்தக் காலத்தில் சுபகாரியங்களைச்
செய்யக்கூடாது. மற்றபடி ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21ஆம் நாளிலிருந்து வைகாசி மாதம் 14ம் நாள் வரை உள்ள
அக்னி நட்டசத்திர காலத்தில் சுபகாயங்கள் செய்ய சாஸ்திரங்கள் எந்தத் தடையும்
விதிக்கவில்லை.
சாதாரணமாக நீங்கள் பஞ்சாங்கத்தைப்
பார்த்தாலே இக்குறிப்பிட்ட காலத்தில் பல சுபமுகூர்த்தங்கள் கணிக்கப்பட்டு
இருப்பதைப் பார்க்கலாம். இப்படிக் கணித்து எழுதிய ஜோதிட சாஸ்திரிகளுக்கு
அடிப்படையான இத்தகைய விஷயங்கள் தெரியாமலா கணிதம் செய்கிறார்கள்;
இல்லவே இல்லை.
அக்னி நட்சத்திர காலத்தில் கிணறு
வெட்டுதல்,
தோட்டம் வைத்தல், மரம் நடுதல், விதை விதைத்தல் போன்ற சுபகாரியங்களைத் தவிர எல்லாவிதமான நல்ல செயல்களையும்
செய்யலாம். அதில் தவறில்லை.
கேள்வி : இந்து மதத்தில் மட்டும் ஜாதிப் பிரிவுகள் இருப்பது ஏன்?
பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள்
என்று ஒருபோதும் கூறப்படவில்லை, பகவத்
கீதையில் கருணைக் கடலான கண்ணபிரான் நான்கு வருணங்கள் பற்றிக் குறிப்பிடுகிறான்,
எதன் அடிப்படையில் என்றால்.
உழைப்பால்
நாட்டை உயர்த்தி அல்லும் பகலும்
சமுதாயத்தின் தேவைக்காகவும் ஓய்வென்பதே
இல்லாமல்
தன்னலம் மறந்து பிறர் நலம் காத்து அனைத்துச்
செயல்களுக்கும் சூத்திரமாக இருப்பவனே சூத்திரன்,
மக்களின்
தேவைக்காகவும் நாட்டின் பொருளாதார
மேம்பாட்டுக்காகவும் தன் உடல். பொருள். ஆவி
அனைத்தையும் அர்ப்பணித்துப் பாடுபடுபவன் வைசிகன்,
தன்னை
வருத்தி பிறருக்காக எதையும் செய்யக்கூடிய
தியாகபுத்தியும் தைரிய சிந்தனையும் யாரிடம்
இருக்கிறதோ
அவன் சத்ரியன்,
தான்
கற்ற கல்வி ஞானத்தை பிறருக்குப் போதித்து
அவ்வாறு போதித்த வண்ணம் வாழ்பவனே பிராமணன்
இவைதான் இந்துமதத்தில் கூறப்பட்டிருக்கும் ஜாதிப் பிரிவுகள்,
இதில் சூத்திரனுக்குப் பிறப்பவன் பிராமணன் ஆகலாம், பிரம்மனணுக்கு பிறப்பவன்
சூத்திரன் ஆகலாம்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)